ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு
நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க: http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூபா, வியட்நாம் ப...