இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்
இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம்
நாள்: 02 மார்ச், 2013 , மாலை 4.00 மணி
இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர்
இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்.
1. T.S.S மணி, மனித உரிமை போராளி
2. இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர்
3. மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர்
4. நாகராஜன், Global Tamil Organization
5. செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
மேலும் பலர் கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன:
T.S.S. மணி :
· இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் போர்குற்ற புலனாய்வு நடந்தாலும் அதன் ஒரு பகுதியான “இனப்படுகொலை போர் குற்றம்” (Genocidal War Crimes) வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் போர்குற்ற விசாரணை என்ற பெயரை கேட்டு குழப்பம் அடைய வேண்டாம்
· மேலும் தமிழர்கள் வலியுறுத்த வேண்டியது, விசாரணை அல்ல.. விசாரணை என்பது ஆய்வறிக்கையில் போய் நிற்கும். ஆனால் செய்யப்பட வேண்டியது புலனாய்வு ஆகும்.. ஏனென்றால் புலனாய்வு என்பது குற்றப்பத்திரிக்கையில் சென்று நிற்கும். அதன் மூலம் நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
மரு. வேலாயுதம்:
· இங்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தேவைகளை விளக்கினார். தமிழர்கள் ஒன்று கூடாமல் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் குறை சொல்வதில் பயன் இல்லை என்று விளக்கினார்
இரா. அருள்
· இலங்கையின் உள்நாட்டு புலனாய்வு முறைகள் யாவும் தோல்வி அடைந்தவை. அவை யாருக்கும் நியாயம் வழங்காது. எனவே சர்வதேச புலனாய்வு செய்வதின் மூலமாக மட்டுமே இலங்கையில் நடந்த கொடூரங்களை உலக அரங்கில் அதிகாரபூர்வமாக நிறுவ முடியும்.
·
முதல் கட்டமாக இது ராஜபக்சேவுக்கும், அதன் மூலம் இலங்கைக்கும் பெருத்த பின்னடைவை உண்டாக்கும். பல நாடுகளுக்கு பயண தடை கூட பெற முடியும். அது இலங்கை மீது மேலும் நெருக்கடி கொடுப்பதற்கான முகாந்திரங்களை வழங்கும். எனவே உள்ள ஆதாரங்கள் அனைத்தும் பன்னாட்டு தற்சார்பு உள்ள பன்னாட்டு புலனாய்வுக்கு மிக விரைவில் உள்ளாக்குவது மிகவும் அவசியம்.
·
இலங்கைக்கு எதிராக இந்த ஆண்டு கொண்டு வரப்படும் எந்த தீர்மானமும் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் இலங்கை மீது நாம் தொடர்ந்து பல பன்னாட்டு முன்னெடுப்புகளை செய்ய முடியும்.
இந்த கூட்டத்தில் ஐநா மன்றத்தில் இலங்கைக்கு நெருக்கடி உண்டாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த திட்டமிடலுடன், பல்வேறு அமைப்புகள் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நன்றி!!
மேலும் தகவல்களுக்கு:
சூரிய பிரகாசு (98409 92689), இராசா ஸ்டாலின் (98848 77487)
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
Comments
Post a Comment